Thursday, January 27, 2011

நுனிப்புல்

பெரிய DASH மாதிரி விவரங்களுடன் விரைவில் ன்னு போட்டாச்சே..
என்ன எழுதுறதுன்னு ஒரே யோசனைங்க...


கவிதை ...சினிமா ...ஆன்மிகம் ..கல்வி ...அரசியல் ..சிறுகதைகள்...நகைச்சுவை ..
இப்படி முன்னவே எழுதிய 1000 பதிவு இருக்குங்க ..


என்னடா இது நம்ம ப்ளாக்கு ஒரு விவரம் கூட சிக்கலையேன்னு இருந்தேன். அது சரி ..சட்டியில இருந்தாதான அகபைல வரும்..

நான் தான்  ஒரு "UNEMPLOYEE". அதனால என் புருஷர் கிட்ட கேட்டேன்னுங்க. அதுக்கு அவர் ...
"வெட்டியா இருக்க நாலு  பேருக்கு,
வெட்டியா இருக்கவன் நாலு பேர் எழுதுறது தான் Blogspot ன்னு
"

பட்டுன்னு  சொல்லீட்டார்...
இப்டி பட்டுன்னு சொன்ன பதருதுள்ள !!!!

என்னெய சப்பான்ல சாக்கி சான் கூப்டாஹ......
அமெரிக்கால மைக்கெல் சாக்சன் கூப்டாஹ..
அதெல்லாம் வேண்டாம்முன்னு விட்டுட்டு நம்ம சங்கத்துல கருத்து சொல்லலாம்னு பார்த்தா...
இவிங்க கிட்ட கேட்டு அசிங்கபட்டுடோமே........


நல்லவேளை யாரும் பாக்கல !!
அப்படியே மைண்டைன் பண்ணு டா சூனா பானா !!
ஒன்னுமே தெரியாமல் தாங்க குட்டிச் சுவரில் உக்கர்ந்திருக்கேன் ...
தனியா உக்கார்ந்து நான் மட்டும் என்னத்த சொல்றது ??
கேவலமா இருக்காது...
அதே நம்ம எல்லாரும் சேர்ந்து பேசினா ???
வாங்க பேசலாம்......
எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்
ஆனா முழுமையா தெரியாது ???
எப்படி ??


திருக்குறள் ல முதல் குறள் என்னனு கேட்டா நமக்கு தெரியும். உடனே அர்த்தத்துடன் சொல்லுவோம்.
(எவ்ளோ பஸ் ல படிச்சிருப்போம் ;) )

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு"


பொருள் : எழுத்துக்கெல்லாம் முதல் எழுத்து "அ". அது போல உலகத்துக்கு முதன்மையானவர் நம்ம கிருஷ்ணர் , ஏசுநாதர், அல்லா இப்டி நமக்கு பிடிச்ச கடவுள்.

(டிஸ்கி: எப்டியோ single gapla ஒரு குறள் சொல்லீட்டேன்)

அதே  நூல்ல கடைசி குறள் என்னனு கேட்டா???
(யோசிங்க.. யோசிங்க ..நல்லா யோசிங்க ..)

இதாங்க நம்ம பிரச்சனை.

எந்த ஒரு விஷயத்தையும் நுனிப்புல் மேயுறது தான் நம்மில் பலபேருக்கு பழக்கம் ..

{ சரி முழுசா தெரிஞ்சு மட்டும் என்ன பண்ண போறோம் ??
என்ன தான் நமக்கு "தமிழ் " மொழி முழுமையா தெரிஞ்சாலும்
IT interview ல தமிழ் தெரியுமான்னா கேக்குறாங்க ??
Java,j2ee தெரியுமானு தான் கேக்குறாங்க. அப்டீலாம் சொல்லபடாது  :)
}

அதே நுனிப்புல் தான் ஆனா கொஞ்சம் உபயோகமா பண்ண போறோம்.

எப்ப பாரு சினிமா,நகைச்சுவைன்னு இருக்கோம். கொஞ்சம் துறவறம் பத்தி பேசலாம். பிடிக்காதவங்க தயவுசெய்து படிக்க வேண்டாம்..
                  

நம்ம எல்லாருக்கும் சமண மத(Jainism monks and nuns) ஆண், பெண் துறவிகளை தெரியும். அட நம்ம மகாவீரர் குரூப் தாங்க.ரொம்ப்ப கஷ்டமான துறவறம் அதாங்க. இவங்கள சாதரணமா நினைகாதீங்க.. நிறைய ராஜகுமாரன் மற்றும் ராஜகுமாரிகள் (படிச்ச பட்டதாரிகள் மற்றும் பெரும் பணக்கரர்கள் )எல்லாத்தையும் வேண்டாம்னு துறவறம் போய் இருக்காங்க. நம்ம நாட்ல அதிகமா துறவறம் போற மக்கள் இவங்க தான்.

2008 ல கூட ஒரு பணக்கார இளம் பட்டதாரி எல்லாத்தையும் துறந்து துறவறம் ஆனாங்க. இப்படி பட்ட துறவிகள் எப்டி இருப்பாங்க ??? அவங்க Rules and regulation என்ன ??? இத பத்தி 2 வரில நச்சுனு சொல்லுங்க...
அவங்கள்ள ஒரு துறவி நம்ம முன்ன வர்றாங்க. அவர் உண்மையான துறவின்னு எப்டி கண்டுபிடிக்கிறது... சும்மா கூகுளேல தேடாம பதில்ல சொல்லுங்க.. 

(தெரிஞ்சா மட்டும் சொல்லுங்க)

Tuesday, January 25, 2011

பெங்களுரு மலர்க்கண்காட்சியில் நான்....

குடியரசு தினம்க்காக Bangalore lalbagh light house ல மலர்க்கண்காட்சியை கடந்த வாரம் முதலே ஆரம்பிச்சிடாங்க. நுழைவுக்கட்டணம் 40 ரூபாய் ஒருவருக்கு. ரொம்ப எதிர்பார்போட போனேங்க.. ஆனா ரொம்ப வாடிய பூக்கள் தான் இருந்தது. வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் அப்டிங்கிற மாதிரி வாடிய பூக்களை கண்டபோதெல்லாம் வாடினேன்(40 ரூபாய் போச்சே). நம்ம ஊட்டி மலர்க்கண்காட்சியை compare பண்ணினா ஒன்னுமே இல்லங்க.. ரொம்ப குறைவான வகையில் தான் மலர்கள் இருந்தது. ஆனா இதுல என் மனதை கவர்ந்தது,
 மலர் அலங்காரத்துல ஒரு சின்ன ரயில்... உங்கள் பார்வைக்கு சில ...















.....

Sunday, January 23, 2011

குட்டி சுவரு...


இன்றைய அவசர  உலகில் 
நம் கனவு எப்படி இருக்கிறது
விரைவில் முன்னேறி  
வெற்றி பெற  வேண்டும். 
ஆனால் எந்த துறையில் ??? எப்படி ??
இதை பற்றி ஒரு குறிக்கோளும் இல்லாமல் .......

ஆடு மேய்த்தவன் எல்லாம் ஏசுநாதர் ஆக முடியுமா ??

நாம் என்னவாக விரும்புகிறோமோ 
அதே கனவு நம் மனதில் 
நெருப்பாய் இருக்கணும் 
அதற்கு நமக்கு நிறைய கருத்துக்கள்
மற்றும் 
அதை செயல் படுத்த ஓர் இடம் தேவை ...

ஒவ்வொரு சாதனை மனிதர்களுக்கும் 
சரியாய் இடம் அமைந்ததா ???
நிச்சயம் இல்லை.
சேக்ஸ்பியர் குதிரை லாயத்தில் குதிரை சாணத்தை அள்ளியவர் .
நியூட்டன் சிறு வயதில் மாடு மேய்த்தார் ..
இப்படி உலக புகழ் பெற்ற மாபெரும் சாதனையாளர்களுக்கு 
சரியான இடம் அது ,அவர்கள், அவர்களுக்கே உருவாக்கியது. 

எந்த ஒரு வேலை செய்வதற்கு முன் 

வேறு சில வேலைகள்  செய்யவேண்டி இருக்கு.
உதாரணம் : சாப்பிடுவதற்கு முன் கை கழுவனும்.
(அந்த பழக்கம் இல்லாதவர்கள் தட்டு அல்லது இலையாவது எடுக்கணும்) 
அதுபோல 

கனவுகள் அதிகமா காணனும்னா
நிறைய விஷயங்க முதல்ல தெரிஞ்சுக்கணும் 
அதுக்கு என்ன பண்றது 
?????

புத்தகங்கள் நிறைய படிக்கணும் ...
துறை சமந்த செய்திகள் அதிகமா
பார்க்கணும் ,கேக்கணும் ...
Google ல தேடிப் படிக்கணும்...
இதுக்கு எல்லாம் நமக்கு நேரமும், 
பொறுமையும் இருக்காது 

ஆனா நமக்கு ரொம்ப பிடிச்ச இடம் 
நம்ம ஏரியா குட்டிச் சுவரு தானுங்க 
அங்க தான்
யார் வேண்டுமானாலும் அமர்ந்து 
நண்பர்களுக்கு கூட அரட்டை அடிக்கலாம்.
அரசியல்,சினிமா, நட்பு,கிரிக்கெட் ,காதல், நகைச்சுவை 
இப்படி உலகச் செய்திகள் அனைத்தும் 
நம்ம மனசுக்கு பிடிச்ச மாதிரி கேட்டு தெரிஞ்சுக்கலாம் ...

உங்க mindvoice எனக்கு கேக்குதுங்க 
நிறைய blogspot ல இந்த குட்டிச் சுவரு இருக்குமே !!!
இதுல மட்டும் என்ன வித்தியாசம்னு தான 

எல்லா ஏரியாகும் ஒரே ஒரு குட்டிச்சுவராங்க  இருக்கு 
அது மாதிரி தான் இந்த விர்ச்சுவல் குட்டிச் சுவரும்  
வாங்க நம்  கருத்துக்களைப் பகிரலாம்..

தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு கவிதை 
இந்த வரிசையில்
தினம் ஒரு  செய்தி 


விவரங்களுடன் விரைவில் ...   



டிஸ்கி:குட்டிச் சுவரு அழுக்ககாம பார்த்துகோங்க :)

Friday, January 21, 2011

கல்லூரி கனவு ...

கனவுகளின் தொடர்ச்சி ......
என் கல்லூரி கனவு ...

கல்லூரி வாழ்க்கைனாவே
கனவுகளின் சுமைகள்தான் அதிகம்
பற்பல  கனவுகள் ...
நாளைய இந்தியா நம்மள நம்பி தான் இருக்குனு
ரொம்ப நம்பினேன்
ஆனால்
என் லட்சியம் என்ன ??

சுலபமா ஒரு வேலை
அதிக சம்பளம்
ஜாலி யா இருக்கனும் ...
வாரம் ஒரு படம் சத்தியம் தியேட்டர் ல
சண்டே  லஞ்ச்கு அஞ்சப்பர் இல்ல ஒரு பொன்னுசாமி
சனிக்கிழமை இரவு பார்ட்டி
ஷாப்பிங்
நிறைய சந்தோசம்...

 என் கனவு இதை பற்றியதா???

என்  பெற்றோர்கள் சொல்லி கேக்காதத நான்
 நம்ம கலாம் சொன்ன வார்த்தையை வேதமாய் கடைபிடிக்கிறேன் ....
ஏன்?
பெற்றோர்கள் படிக்க சொல்வாங்க
நம்ம கலாம் கனவு காணல்ல சொல்றார் ;)

பிற்காலத்தில் நீ என்னவாக விரும்புகிறாயோ
அதை பற்றியே நம் கனவு இருக்கணுமாம் ..
சரி நாமும் கொஞ்சம் கனவு காணுவோம்னு
இருந்தா
பயபுள்ள தூக்கமே வரல...


ரைட்டு...
முயற்சி தான நம்ம முதல் வித்துனு
மறுமுறையும் காண ஆரம்பித்தேன் ..
என் கனவின் பயணத்தில்
முதல் கனவு

காதல் ...

ஆஹாஹா !!!

இப்படியே காதல் கனவு வந்ததால்
திருமணக்கனவே நிஜமானது
இது போல்



காதல் கனவில் இலட்சியத்தை மறந்தேன்
தற்காலிகமாய்....
கலாம் கூறிய லட்சிய கனவுத்தேடல் நிறைவேறாமல் ..............

என் தேடல் மறுமுறை துவங்குகிறது
என் இலட்சியத்தை தேடி
கனவு சுமைகளுடன் .....
 
படங்கள் உதவி: நானே வரைஞ்சது..

முதல் முயற்சி


முயற்சிகளின் முதல் பயணம்
சாதனைகளின் தொடக்கம்
திறமைகளின் முதல் வித்து
புகழ்ச்சியின் ஆரம்பம்
நம் முதல் கனவு...

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவுகள்
ஆயிரம் கனவுகளுடன் ஒரு வாழ்க்கை
இது என் கனவு
என் முதல் துவக்கம்...

புகழை நோக்கிய என் முதல் பயணம்
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை
என் தேடல் துவங்குகிறது
என் திறமைகளை தேடி
என் கனவுகளின் சுமைகளோடு !!!!

Thursday, January 20, 2011

கிறுக்கல்கள்





கிறுக்கல்கள் தொடரும் உங்கள் ஆதரவுக்கு பிறகு!!!

test

test