Thursday, October 4, 2012

பஞ்ச பூதத்திற்குப் பஞ்சம்!!!


பருவ மழை பொய்த்தது
நிலத்தடி நீர் வற்றி
தமிழகம் முழுதும்
அக்னி வெயில்
எங்கும் வறட்சி
காசு குடுத்து
குடிநீர் வாங்கும் நிலை
நீர் தரமறுக்கும் கர்நாடகம்
பஞ்ச பூதம் அனைவர்க்கும் பொது....
மரங்களைப் பாதுகாத்து
நிலத்தடி நீரை
சேமிக்கும் கர்நாடக மக்களை
எதிர்த்து ஒன்று பட்டு போராடுவோம்!!!

Tuesday, March 20, 2012

பரிகாரம் நூற்றி இருபது ரூபா !!!சிறு தீக்குச்சி 
சமைக்க கறிகாய் 
படைக்க முக்கனி 
குட்டிக்குடில் 
மறைக்கும் கதவு 
காக்கும் வேலி 
எழுத்தறிவிக்கும் காகிதம் 
கண்டிக்கும் ஆசானின் ஆயுதம் 
மணக்கும் பூமாலை 
கலப்பதற்கு கட்டில் 
மஞ்சத்தின் தலையணை 
முதல் 
மரணத்தின் சவப்பெட்டி 
வரை 
அழியும் 
நான்
இயற்கையின் சுவாசம் 
உங்களின் உயிர் மூச்சு....
தனக்காக வாழும் 
உங்களுக்கு...
உங்களுக்காக உயிர் விடும் 
என்னை வளர்க்க
நேரமில்லை...என் ஆரம்ப விலை 
பத்து ரூபாய் மட்டுமே 
மாதம் ஒன்று 
வருடத்திற்கு பன்னிரண்டு 
மொத்தச செலவு
 நூற்றி இருபது ரூபா 
உங்களின் ஒரு மாத கேபிள் வாடகையை விட குறைவே ...

பிரபஞ்சத்தின் ஓர் உயிர்க்கோளை
உங்களை விட்டால் வேறு யார் தான் பார்பதாம்!!!டிஸ்கி : உங்களுக்கு வீட்ல தோட்டம் இல்லையா..இல்ல பராமரிக்க நேரம் இல்லையா ..மரம் வளர்க்க ஆசை இருந்த மட்டும் போதும்... கவலைய விடுங்க.. எது எதுக்கோ கோவிலுக்கு போறீங்க, இதுக்காக கூட போலாம்ங்க. சின்ன மரக்கண்ணு வாங்கீட்டு போங்க. வேண்டுதல்ன்னு சொல்லி குடுங்க உங்க அம்மனுக்கு...பண்ண பாவத்துக்கு எவ்ளோ பலி குடுக்குறோம். பலியான பாவத்துக்கு சின்ன உயிரை காணிக்கையா குடுங்க. அம்மன் சந்தோசமா உங்க காணிக்கையை ஏத்துப்பாங்க :)Friday, December 23, 2011

பயம் அறியாள்!!


             தமிழக சாம்ராஜ்யத்தை பற்பல மேதைகள் ஆண்டனர். அதில் குறிப்பிட்ட சில மேதைகள் தொடர்ந்து பல ஆண்டுகள் ஆண்டு வரலாற்று சாணக்கியராய் ஆகினர்.மதி பிழிந்து யோசித்து மண்ணைக்காத்த மன்னன்களுக்கு பதிலாய் மதி கெட்டு மலிந்த ஊழல் மத்தியில் நான் கற்றது அவர்கள் சுரண்டுவதற்கு அல்ல என்று உங்களுக்கு உணர்த்தவே.
             வீரமா எழுதினா மட்டும் ஊழல் ஒழியுமா?? இல்லங்க ஆனா நம்ம விழிப்புணர்வினால் ஊழல் குறையும். எப்பிடி?? 

குள்ள நரிக்கூட்டம் - இதுலையுமா? 

                நம்ம மாநிலத்தில் இனி மூன்று மாதங்களில் புதிய ரேசன் கார்டுகள் பட்டுவாடா..போலி  மின்னணு குடும்ப அட்டைகளை தடுக்கவாம்.தேசிய மக்கள் தொகை பதிவு அமைப்பின் கீழ் பத்து விரல் ரேகைகள் மற்றும் கண்ணின் கருவிழி ஆகியவற்றை பதிவு செய்து, பிரத்தியேக அடையாள அட்டை வழங்குவதற்கான கணக்கெடுப்பு தற்போது நடத்தப்பட்டு வருகிறது. இந்த உடற்கூறு முறையிலான கணக்கெடுப்பு முடிந்தவுடன், மின்னணு குடும்ப அட்டை வழங்கப்படுமாம்.  
                   இது மூக்க தொட தலைய சுத்தின கதையா இல்ல??? ஒரு காலத்துல அமெரிக்க விண்வெளி மேதைகள் வின்கலத்துல குறிப்பு எடுக்க பால்பாயிண்ட் பேனாவ கொண்டு போய் புவிஈர்ப்பு விசைனால அந்த பால்பாயிண்ட் பேனாவ use பண்ணவே முடியலையாம். அப்புறம் அதுக்குன்னு ஒரு தனி ஆராய்ச்சி பண்ணாங்களாம். அத பார்த்த இன்னோர் நாட்டு விண்வெளி மேதை ஒரு சின்ன Pencil இல எடுத்துட்டு போனாராம். இது நகைச்சுவைக்கு இல்லங்க. ஒரு சின்ன விசயத்துக்கு ரொம்ப யோசிக்க தேவ இல்லை


               அப்ப எளிய முறையில் எப்பிடி ஊழல தடுக்கலாம்? எனது அடுத்த கனவு(சும்மா தூங்கிட்டே இருந்தா இப்டி தான்!!!) எல்லார் வீட்லயும் மின்சாரம் இருக்கோ இல்லையோ ஆனா கண்டிப்பா மாதம் தவறாம பில் வரும். அதுல உள்ள EB No. கண்டிப்பா unique கா தான் இருக்கும். அத மட்டும் மின்னணு குடும்ப அட்டையில் சேர்த்தா போதும். அசல் யாரு போலி யாருன்னு சுலபமா தெரிஞ்சிடும். 

Wednesday, August 24, 2011

நமீதா வருகை !!!


இன்னும் எத்தனை நாளைக்கு????
                                
                 நமீதா பத்தி நியூஸ்னா உடனே படிக்கிறோம். திரிஷாக்கு கல்யாணமா உடனே யாரு மாப்பிளைன்னு தெரியனும். ஏங்க ஏன் ????    நமக்கெல்லாம் media ல உள்ளவங்க அந்தரங்க கிசு கிசுகளில் அப்படி என்ன ஆர்வம் ??  நம்ம ஊருக்கு நமீதா வர்ராங்களா உடனே ஓடிப் போய் ரோட்ல நின்னு வேடிக்கை பார்ப்போம். 74 வயசுல ஒரு மனுஷன் ஊழலுக்கு எதிரா நமக்காக போராட்டம் பண்றார் அதுக்கு மட்டும் facebook ல ஒரு vote போட்றோம், இல்ல mobile ல ஒரு fwd sms பண்றோம். அவ்ளோ தான். 

I STAND FOR IAC (India Against Corruption) 

DO YOU???

 To
       supremecourt@nic.in  

Subject: Please Take Necessary Step against Corruption

Honorable Chief Justice,

Corruption is a SIN to any country, it hinders our growth and prosperity of a nation, this is the right time to implement the LOKPAL bill.

Please make necessary step to pass this Bill.

Thanks 
Dharsini.N


என்ன மாதிரி இலத்தரசிங்க எல்லாம் serial பார்த்துட்டு சமையல் பண்றது மட்டும் இல்லங்க. இப்படி கூட வீடுக்குள்ள இருந்து போராட்டம் பண்ணவும் முடியும். நானே பண்றேன் எத்தன பேர் IT company லையும், MNC லையும் இருக்கீங்க ஏன் உங்க office mail id ல இருந்து ஒரு சின்ன mail corruption ன எதிர்த்து supreme court க்கு அனுப்ப உங்களுக்கு தைரியம் இல்லையா ??? இல்ல நேரம் இல்லையா ???
இப்டி கூட போராடாலம்ங்க. நாடிய விடியல் விரைவில் !!!

                              மண், பொன்ல தான் ஒரு காலத்துல எல்லாரும் சேமிப்பு செய்வாங்க முக்கியமா நடுத்தர வர்க்கம். ஆனா இன்னைக்கு நமக்கு எட்டக்கனியாய் இருப்பது இது இரண்டும் தான். இதுக்கு ஒரே காரணம் விலைவாசி உயர்வு.சரி எதுனால இந்த விலைவாசி உயருது?? அதிகமா கருப்பு பணம் புழங்குறது கூட முக்கிய காரணம் தான்ங்க.


                                இன்றைக்கு கறுப்புப் பணம் அதிகமா புழங்குற ஒரே ஒரு முக்கிய தொழில் "Real Estate" தாங்க. நிலத்தோட மதிப்பு மக்களுக்கு பிடிக்கிதோ பிடிகலையோ அதன் விலை வரையறை இல்லாம நிர்ணயம் செய்யப்படுகிறது பல பேராசைக்காரர்களால். அதனால தான் நாம பார்க்கிற சாதாரண  விளம்பரங்களில் கூட விலாஸ் விலையின் ஆரம்ப விலை 5.5 கோடி. இது மேல் தட்டு மக்களுக்கு மட்டுமே சாத்தியம்.இப்படி வளர்றதுக்கு பல அரசியல் புள்ளிகள் முக்கியக்காரணம். இவங்க யாரையும் நாம கட்டு படுத்த முடியாது. ஆனா இவங்க இன்னும் வளர்றத நம்மளால தடுக்க முடியும். ஊழல் செய்கிறவன் புத்திசாலி அதை தடுப்பவன் அறிவாளி. இரண்டு பேருக்கும் உள்ள சின்ன வித்தியாசம்"TRICKS".இதோ என் தொழில் நுட்பக்கனவின்  புதிய பரிணாமம். 

நில "வரம்" :

                  நாம வாங்கிற நிலம் சரியான வடிவமைப்பில்(சதுரம், செவ்வகம்,வட்டம்) இருக்கது எல்லாருக்கும் சாத்தியம் இல்ல. வாங்குற நிலம் பூங்காவை ஒட்டி இருக்கலாம்,மலைச்சரிவில் இருக்கலாம்,ஏரி ஓரத்துல இருக்கலாம் ஏன் சுடுகாடு பக்கத்துல கூட இருக்கலாம்.இப்படி ஒரு சீரற்ற வடிவநிலமா (Irregularly-shaped landscape)இருக்கவும் வாய்ப்பு இருக்கு. இப்படி இருக்க நிலத்தோட வரைபடத்த நாம paper ல சரியாய் வரைய நமக்கு சின்ன புள்ள மாதிரி scale, pencil,ali rubber எல்லாம் வேணும். இதில்லாம நம்ம நிலத்த சரியாய் அளக்க நமக்கு வேறு சில கருவிகளும் தேவை. அதை வைத்து தான் நம்ம நிலத்தோட எல்லைகளை நாம வரையறை செய்ய முடியும். இதெல்லாம் இல்லாம நம்ம நிலத்த எப்டி வரையறை செய்றது??? இதுக்கு தாங்க நம்ம GPS service number. முன் பதிவுல சொன்னா மாதிரி நிலத்தோட எல்லைக்குள்ள உள்ளல இடத்துக்கு ஒரு நம்பர் செட் பண்ணனும் அதுல நிலத்துக்கு சொந்தமானவர் பெயரையும் சேர்த்து பதிவு பண்ணனும். ஒரு சின்ன உதாரணம் : நம்மில் பல பேர் "Google Map" Tool tip use பண்ணி இருப்போம். அதே தாங்க இந்த GPS service number. நிலத்துக்குள்ள நாம எங்க நடந்தாலும் நம்ம பெயர் மற்றும் நம்பர் வரும் நிலத்த தாண்டினதும் அடுத்த நிலத்தோட GPS service number மற்றும் அந்த நிலத்தோட உரிமையாளர் பெயர் வரும்.


பங்குச்சந்தையில் புதிய அறிமுகம் :

                                ஊழல் அதிகமா நடக்குறதே நில பதிவு பண்ற இடத்துல தான், இதுக்கு GPS service number set பண்ணா எப்டி ஊழல் குறையும்??? கண்டிப்பா குறையும் ,

அதுக்கு முதல்ல நம்ம நிலப்பதிவு பண்ற அலுவலகம் இருந்தாதான. எப்டி? ஒவ்வொரு நிலத்துக்கும் அரசாங்கமே survey number set பண்ணி இருப்பாங்க. அந்த number unique கா தான் இருக்கும். அத தான் நாம GPS number ரா செட் பண்றோம். யார் பெயர்ல நிலம் இருக்கோ அவங்க பெயர் வரும். 

                                 இப்ப நம்ம நிலத்த வாங்கவும் விக்கவும் பங்குசந்தைய நாடலாம். நாம நிலத்த விக்கனும்னா நிலத்தோட நம்பர் மற்றும் நில விலையை நீங்க பங்குசந்தைல விளம்பரம் செய்யணும். வாங்குறவங்க  உங்க நிலத்த வாங்கிக்கலாம். இப்டி செய்றனால நமக்கு registration க்கு லஞ்சம் பணம் , broker பணம், நில மோசடி இதெல்லாம் இல்லாம நிலத்த, நிலத்தோட owner கிட்ட நாமலே வாங்கலாம்.நிலம் விற்பனை செய்றதும் வாங்குறதும் சுலபம்.இவ்ளோ தாங்க. இத செயல் படுத்துறது கஷ்டம்னு யோசிக்காதீங்க. ஒரு காலத்துல TV, Land line phone வாங்க யோசிச்ச நாம இப்பலாம் LED TV, Touch Screen Mobile சாதரணமா உபயோகப்படுத்துறோம். 

டிஸ்கி : நம்ம ஊருல  இலவசமா இப்ப LAPTOP கூட கிடைக்குதுங்க :)

Monday, July 4, 2011

Land Scam:நில திருட்டு

 

The Land Deal Mystery :

Incredible work even more harder.

Now a days, why do media,magazine and newspapers highlight election,cricket and scam??

Just imagine how we must feel, why don't they show and write something great on how to improve the standards of living the poor??
 Its not their fault:
The only thing everyone wants hi-tech life as cheaply as possible. Everyone's dream is to build a luxurious home. we are ready to buy a low value home in high cost. Taking maximum exemptions is going to increase our refund next year, not decrease it.But its not easy to buy. Because land scam is one of the most serious challenges facing us today. Why our government and our agencies not taking any action on public??The Government Wants You to Reduce Your Taxes,It is true! The tax laws are written to reduce your taxes, not to increase them. But the obvious tax evasion is illegal,but tax avoidance is legal.

Measure our landscape without any tools:

For irregularly-shaped landscape or gardens take general length and width measurements. Measure the length and width of bump-outs separately as triangles, circles or squares and note these measurements on paper, Designing our landscape on paper can be intimidating when we don't know where to start. But without any tools can we measure it??

Is it possible to do this?? yeah off-course. In this day, we have no secrets. The electronic conveniences we embrace as part of everyday life. we can even track a cell phone location using maps with landmarks chosen by us, with GPS tracking and various software programs. But GPS works without the mobile service. we need mobile service to connect to the google maps or other servers to download the map images and display our positions. Like this we can measure our landscape structure to analyze the response of landscape connectivity measures to habitat fragmentation using GPS service number.
  
என்னடா ரொம்ப மாசம் இடைவெளி விட்டதே தப்பு, இதுல ஒரே பீட்டரா வேற இருக்கேன்னு யோசிக்கப்படாது. எங்க ரமேஷ் அண்ணாக்கு ஒரு அண்ணி தேடினோம். எங்க அண்ணே அழகுக்கும் அறிவுக்கும் "HERO" மாதிரி இருந்தனால ஒரு "HEROINE" கூட கிடைக்கல(என்ன அண்ணா புரியுதா??? ) 
சரி பீட்டர்க்கு வரேன் எங்க ரமேஷ் அண்ணா மாதிரி லட்சாதிபதி ஆகணும்னா முதல்ல நிலம் வாங்கணும் அப்புறம் வீடு கட்டணும்.நில ஊழல் இல்லாத ஊரே இல்ல.இந்த ஊழல்ல எப்டி தடுக்கலாம்னு ஒரு சின்ன ஐடியா. "Nokia" வச்சு area வ நோக்குற மாதிரி (Google Map).

நிலம் வாங்கினதும் நிலத்தோட எல்லைக்குள்ள உள்ள இடத்துக்கு ஒரு நம்பர் செட் பண்ணனும் அதுல registration பண்ணிடனும் இது தாங்க GPS service நம்பர். இந்த நம்பர் வச்சு யார் வேண்ணா இடத்தோட owner ர தெரிஞ்சுக்கலாம். சரி நிலத்தோட எல்லை எதுவரை??? அத அளக்க டேப் இதெல்லாம் வேண்டாம்ங்க.இதும் நம்ம GPS மூலமா தெரிஞ்சுக்கலாம்.  
எப்படி? விரைவில்..

Wednesday, February 2, 2011

அந்தத்தின் ஆதி

ஆதியும் அவனே அந்தமும் அவனே. அவனின்றி ஓர் அணுவும் அசையாது. நெற்றிக்கண் திறந்தால் அண்டத்தையே நொடியில் அழிப்பவன். பெருமைமிக்க சிவனை தரிசிக்க சிவதலத்தை நோக்கி இரு நண்பர்களின் புண்ணிய பயணம்.

அந்த இரு நண்பர்கள் பல இடையூறுகளை கடந்து வருகிறார்கள் இந்த சிறப்புமிக்க சிவதலதிற்கு. ஒவ்வொரு முறை அவர்கள் கிளம்பும் போதும் ஓர் தடை. அது பணமாக, நோயாக அல்லது இயற்கை சீற்றமாக.இது அவர்களின் கனவு ஸ்தலம் என்றே மாறிவிட்டது எனலாம்.
இப்படி கனவுகளுடன் சிவதலத்தின் சன்னிதியை அடைந்தார்கள். அன்றோ பிரதோஷம். பக்தியில் மக்கள் வெள்ளம். நுழைவு சீட்டு எடுக்கும் வரிசையில் பிரபல பிரமுகரின் வருகையில் பரபரப்பு. " சிறப்பு மனிதருக்கு சிறப்பு கவனிப்பு". அவருக்கு முன் வந்த இவர்களுக்கோ நுழைவாயிலை தாண்டிய வரிசை.
  
அதிகாலை முதல் விரதம். சொட்டு நீர் அருந்தாமல் பக்தியுடன் வரிசையில். மெதுவாக நகர்ந்தது வரிசையும் நேரமும். உச்சிகால பூஜை நெருங்கும் தருவாயில் இவர்கள் இருவரும் கருவறை வாசலை அடைந்தனர். அணு அணுவாய் சிவலிங்கம் தரிசித்தனர்.
ஓர் நிமிடம் தான்..ஒரே ஓர் நிமிடம் தான். அதிர்ச்சி. இருவர் பார்வையும் பரிமாறிக்கொண்டது அர்த்தத்துடன்.. பின் ஏளனமாய் சிரித்தனர். இந்த லிங்கம் தரிசிக்கவா தவம் இருந்து வந்தோம்?? என அவர்களே எள்ளி நகையாடினர்.

(20௦ ஆண்டுகளுக்கு முன்  இந்த இரு நண்பர்கள் வாழ்ந்த ஓர் கிராமம், அதில் சிறிய ஆறு.. பால்ய வயதில் ஓர் விளையாட்டு. ஆற்றை வேகமாய் நீந்தி கடந்து யார் முதலில் போய் அந்த பாறையை தொடணும். ஜெயித்தவன் பெயரின் முதல் எழுத்து பாறையில் செதுக்கப்படும். இதில் செதுக்கிய எழுத்தின் உரிமைக்காரன் பாறையில் தான் அந்த சிவ லிங்கம் செதுக்கி இருந்தார்கள்..இது தான் அவர்கள் நகையின் காரணம் )

இது வெறும் கற்பனை கதையே. எந்த ஒரு கற்களும் கடவுள் ஆக வாய்ப்பில்லை. நம் முன்னோர்கள் கற்களை செதுக்கிய காரணங்களே வேறு. 
      
Shiva Lingam - The Symbol Of Sex
(மனித வாழ்வின் ஆரம்பம்.)

இரவின் நிர்வாணம் 
விடாமல் பெய்யும் மழை 
சூறாவளி 
அகண்ட வான் 
அளவில்லா விண்மீன்கள் 
வரையறையற்ற அலைகடல்

இந்த பிரம்மாண்ட பிரபஞ்சத்தை பார்த்து பயந்து உருவாகின நம் ஆதி பகவானும்,வருண பகவானும்.

"ஆதி மனிதனின் பயம் கடவுளாய் ஆனது".
மதத்துடன் தன்னை அடையாளம் காண்பதில் 
மனிதநேயத்தை தொலைக்கிறோம்
                       
கடவுள் இருகிறாரா??இல்லையா ??
இதற்க்கு விடை ....... நாமே தேடலாம் ...நம்மிடமே.

அன்பே சிவம்..உன் வாழ்க்கை உன் கையில்..

Thursday, January 27, 2011

நுனிப்புல்

பெரிய DASH மாதிரி விவரங்களுடன் விரைவில் ன்னு போட்டாச்சே..
என்ன எழுதுறதுன்னு ஒரே யோசனைங்க...


கவிதை ...சினிமா ...ஆன்மிகம் ..கல்வி ...அரசியல் ..சிறுகதைகள்...நகைச்சுவை ..
இப்படி முன்னவே எழுதிய 1000 பதிவு இருக்குங்க ..


என்னடா இது நம்ம ப்ளாக்கு ஒரு விவரம் கூட சிக்கலையேன்னு இருந்தேன். அது சரி ..சட்டியில இருந்தாதான அகபைல வரும்..

நான் தான்  ஒரு "UNEMPLOYEE". அதனால என் புருஷர் கிட்ட கேட்டேன்னுங்க. அதுக்கு அவர் ...
"வெட்டியா இருக்க நாலு  பேருக்கு,
வெட்டியா இருக்கவன் நாலு பேர் எழுதுறது தான் Blogspot ன்னு
"

பட்டுன்னு  சொல்லீட்டார்...
இப்டி பட்டுன்னு சொன்ன பதருதுள்ள !!!!

என்னெய சப்பான்ல சாக்கி சான் கூப்டாஹ......
அமெரிக்கால மைக்கெல் சாக்சன் கூப்டாஹ..
அதெல்லாம் வேண்டாம்முன்னு விட்டுட்டு நம்ம சங்கத்துல கருத்து சொல்லலாம்னு பார்த்தா...
இவிங்க கிட்ட கேட்டு அசிங்கபட்டுடோமே........


நல்லவேளை யாரும் பாக்கல !!
அப்படியே மைண்டைன் பண்ணு டா சூனா பானா !!
ஒன்னுமே தெரியாமல் தாங்க குட்டிச் சுவரில் உக்கர்ந்திருக்கேன் ...
தனியா உக்கார்ந்து நான் மட்டும் என்னத்த சொல்றது ??
கேவலமா இருக்காது...
அதே நம்ம எல்லாரும் சேர்ந்து பேசினா ???
வாங்க பேசலாம்......
எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்
ஆனா முழுமையா தெரியாது ???
எப்படி ??


திருக்குறள் ல முதல் குறள் என்னனு கேட்டா நமக்கு தெரியும். உடனே அர்த்தத்துடன் சொல்லுவோம்.
(எவ்ளோ பஸ் ல படிச்சிருப்போம் ;) )

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு"


பொருள் : எழுத்துக்கெல்லாம் முதல் எழுத்து "அ". அது போல உலகத்துக்கு முதன்மையானவர் நம்ம கிருஷ்ணர் , ஏசுநாதர், அல்லா இப்டி நமக்கு பிடிச்ச கடவுள்.

(டிஸ்கி: எப்டியோ single gapla ஒரு குறள் சொல்லீட்டேன்)

அதே  நூல்ல கடைசி குறள் என்னனு கேட்டா???
(யோசிங்க.. யோசிங்க ..நல்லா யோசிங்க ..)

இதாங்க நம்ம பிரச்சனை.

எந்த ஒரு விஷயத்தையும் நுனிப்புல் மேயுறது தான் நம்மில் பலபேருக்கு பழக்கம் ..

{ சரி முழுசா தெரிஞ்சு மட்டும் என்ன பண்ண போறோம் ??
என்ன தான் நமக்கு "தமிழ் " மொழி முழுமையா தெரிஞ்சாலும்
IT interview ல தமிழ் தெரியுமான்னா கேக்குறாங்க ??
Java,j2ee தெரியுமானு தான் கேக்குறாங்க. அப்டீலாம் சொல்லபடாது  :)
}

அதே நுனிப்புல் தான் ஆனா கொஞ்சம் உபயோகமா பண்ண போறோம்.

எப்ப பாரு சினிமா,நகைச்சுவைன்னு இருக்கோம். கொஞ்சம் துறவறம் பத்தி பேசலாம். பிடிக்காதவங்க தயவுசெய்து படிக்க வேண்டாம்..
                  

நம்ம எல்லாருக்கும் சமண மத(Jainism monks and nuns) ஆண், பெண் துறவிகளை தெரியும். அட நம்ம மகாவீரர் குரூப் தாங்க.ரொம்ப்ப கஷ்டமான துறவறம் அதாங்க. இவங்கள சாதரணமா நினைகாதீங்க.. நிறைய ராஜகுமாரன் மற்றும் ராஜகுமாரிகள் (படிச்ச பட்டதாரிகள் மற்றும் பெரும் பணக்கரர்கள் )எல்லாத்தையும் வேண்டாம்னு துறவறம் போய் இருக்காங்க. நம்ம நாட்ல அதிகமா துறவறம் போற மக்கள் இவங்க தான்.

2008 ல கூட ஒரு பணக்கார இளம் பட்டதாரி எல்லாத்தையும் துறந்து துறவறம் ஆனாங்க. இப்படி பட்ட துறவிகள் எப்டி இருப்பாங்க ??? அவங்க Rules and regulation என்ன ??? இத பத்தி 2 வரில நச்சுனு சொல்லுங்க...
அவங்கள்ள ஒரு துறவி நம்ம முன்ன வர்றாங்க. அவர் உண்மையான துறவின்னு எப்டி கண்டுபிடிக்கிறது... சும்மா கூகுளேல தேடாம பதில்ல சொல்லுங்க.. 

(தெரிஞ்சா மட்டும் சொல்லுங்க)