Thursday, April 19, 2012



Wednesday, April 18, 2012

முக்கிய பதிவ்வ்வ்வ்வு


பிறந்தோம் வளர்ந்தோம்னு இருந்து என்ன பிரயோஜனம். வாழும் வாழ்க்கைல நாலு பேருக்கு நல்லது பண்ணணும்லஅதான் மக்களுக்கு சில பயனுள்ள தகவல்கள் சொல்லு அவங்களை உஷார் படுத்தலாம் அப்டின்னு இந்த பதிவை எழுதுறேன். ஏதோ என்னால முடிஞ்சது.

உங்களில் சில பேர் பள்ளி முழு ஆண்டு விடுமுறைக்கு பாட்டி வீட்டுக்கு போயிருப்பீங்க. ஆனா நான் பிறந்து வளர்த்தே எங்க பாட்டி வீட்ல தான்.எங்க அம்மா சின்ன வயசா இருக்கும் போது இந்த வீடு கட்டினாங்கன்னு எங்க பாட்டி சொல்வாங்க.







எங்க ஊர்லையே எங்க பாட்டி வீட்ல தான் கலர் டிவி வாங்கினாங்க. பெரிய ஆண்டனா இருக்கும்.அப்ப ஒளியும் ஒலியும், சினிமா, நியூஸ், கிரிகெட் இதெல்லாம் பார்க்க எங்க தெரு மக்கள் எல்லாரும் வருவாங்க.எனக்கு தெரிஞ்சு எங்க வீட்ல எப்பவுமே அதிகமா ஆட்கள் இருப்பாங்க.வாசல்ல பெரிய திண்ணை இருக்கும்.திண்ணைக்கு கீழ சாக்கடை இருக்கும்.மழை காலத்துல சாக்கடை முழுக்க சுத்தமா ஆய்டும்.நாங்க அதுல கத்திக்கப்பல் விடுவோம்,சித்திரை திருவிழாக்கு(ஊர் திருவிழா : காப்பு கட்டி பதினஞ்சு நாள்ல தொடங்குற திருவிழா ஆரம்பிக்கும்) ஊர்ல உள்ள சொந்த பந்தம் எல்லாம் வருவாங்க. அப்ப பட்டம் விடறது, பப்பர மிட்டாய் காரன் எங்க கைல வாட்ச்,ரயில்,பஸ் இப்டி மிட்டாய்லையே கைல ஒட்டுவான்.அவனுக்காக நாங்க எல்லாரும் திண்ணைல காத்திருகிறது(திருவிழாக்கு மட்டும் தான் அவன் வருவான் எங்க ஊருக்கு),கொல்லைக்கு போய் கோழி குண்டு ஆடறது,திண்ணைல மல்லாக்க படுத்துட்டு நட்சத்திரத்த எண்ணுறது இப்டி எல்லாம இருந்தது என் பாட்டி வீடு.

எத்தனையோ நண்பர்கள் வீடு விற்கும் போது எனக்கு ஒன்றும் தோன்றியது இல்லை. என் திருமணம் முடிந்து மறு வீட்டிற்கு நாங்கள் வந்து கிளம்பும் போது.... நான் பிறந்து, தவழ்ந்து,நடந்து,விளையாடின வரை என்னை இருபத்திமூன்று வயது வரை என்னை பாதுகாத்த என் உயிர் நண்பன் இனி எனக்கில்லை என்று நினைக்கும் போது என்னை அறியாமல் கண் கலங்கியது.இனி நான் என் வாழ்நாள் முழுக்க விருந்தாளியா மட்டும் தான் போக முடியும்.

இப்படி ஒரு கஷ்டமான தருணங்கள் வந்தும் அதை மீறி என் மகிழ்ச்சிக்கு காரணமாய் இருந்தது என் புதிய சொந்தங்கள்... 





இப்படி என்னை சந்தோசமாக ஏற்ற அனைத்து உள்ளங்களுக்கும் என் நன்றி :) 


இதற்காக தானே ஆசைப்பட்டாய் ராஜகுமாரா

                     இப்படி எல்லார் வாழ்க்கையிலும் கஷ்டங்கள் வரும் நம்மை சுற்றி உள்ள நல்ல உள்ளங்களை நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வளவு தூரம் நான் சொல்வது இந்த விருட்சத்தின் நோக்கம் நம் அனைத்து சொந்தங்களும் மகிழ்ச்சியை, துக்கத்தை, வீட்டு விஷேசத்தை பகிர்ந்து கொள்ள மட்டுமே.இதில் அனைவரும் ஒன்று கூடி மகிழ மட்டுமே.அனைவரும் பதிவுகளை பகிருங்கள்...

மூஞ்சீல குத்த வேண்டிய முக்கிய தருணங்கள்  

                     பதிவுகள் போட தெரியவில்லை எனில் பதிவுகளை போடுபவர்களை மதித்து பதில் எழுதுங்கள்.அதை விட்டு இதுல கூட குறை கண்டு பிடித்து பிரச்சனை எப்படி பண்ணலாம் என யோசிக்க வேண்டாம் என்று மிக மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

லொள்ளு:

               ஒரு அவ்ளோ தான் பதிவு முடிஞ்சது.ஒரு பதிவு எழுத நான் பட்ற பாடு இருக்கே..ஹ்ம்ம்ம் ;)