Wednesday, August 24, 2011

நமீதா வருகை !!!


இன்னும் எத்தனை நாளைக்கு????
                                
                 நமீதா பத்தி நியூஸ்னா உடனே படிக்கிறோம். திரிஷாக்கு கல்யாணமா உடனே யாரு மாப்பிளைன்னு தெரியனும். ஏங்க ஏன் ????    நமக்கெல்லாம் media ல உள்ளவங்க அந்தரங்க கிசு கிசுகளில் அப்படி என்ன ஆர்வம் ??  நம்ம ஊருக்கு நமீதா வர்ராங்களா உடனே ஓடிப் போய் ரோட்ல நின்னு வேடிக்கை பார்ப்போம். 74 வயசுல ஒரு மனுஷன் ஊழலுக்கு எதிரா நமக்காக போராட்டம் பண்றார் அதுக்கு மட்டும் facebook ல ஒரு vote போட்றோம், இல்ல mobile ல ஒரு fwd sms பண்றோம். அவ்ளோ தான். 

I STAND FOR IAC (India Against Corruption) 

DO YOU???

 To
       supremecourt@nic.in  

Subject: Please Take Necessary Step against Corruption

Honorable Chief Justice,

Corruption is a SIN to any country, it hinders our growth and prosperity of a nation, this is the right time to implement the LOKPAL bill.

Please make necessary step to pass this Bill.

Thanks 
Dharsini.N


என்ன மாதிரி இலத்தரசிங்க எல்லாம் serial பார்த்துட்டு சமையல் பண்றது மட்டும் இல்லங்க. இப்படி கூட வீடுக்குள்ள இருந்து போராட்டம் பண்ணவும் முடியும். நானே பண்றேன் எத்தன பேர் IT company லையும், MNC லையும் இருக்கீங்க ஏன் உங்க office mail id ல இருந்து ஒரு சின்ன mail corruption ன எதிர்த்து supreme court க்கு அனுப்ப உங்களுக்கு தைரியம் இல்லையா ??? இல்ல நேரம் இல்லையா ???
இப்டி கூட போராடாலம்ங்க.



 நாடிய விடியல் விரைவில் !!!

                              மண், பொன்ல தான் ஒரு காலத்துல எல்லாரும் சேமிப்பு செய்வாங்க முக்கியமா நடுத்தர வர்க்கம். ஆனா இன்னைக்கு நமக்கு எட்டக்கனியாய் இருப்பது இது இரண்டும் தான். இதுக்கு ஒரே காரணம் விலைவாசி உயர்வு.சரி எதுனால இந்த விலைவாசி உயருது?? அதிகமா கருப்பு பணம் புழங்குறது கூட முக்கிய காரணம் தான்ங்க.


                                இன்றைக்கு கறுப்புப் பணம் அதிகமா புழங்குற ஒரே ஒரு முக்கிய தொழில் "Real Estate" தாங்க. நிலத்தோட மதிப்பு மக்களுக்கு பிடிக்கிதோ பிடிகலையோ அதன் விலை வரையறை இல்லாம நிர்ணயம் செய்யப்படுகிறது பல பேராசைக்காரர்களால். அதனால தான் நாம பார்க்கிற சாதாரண  விளம்பரங்களில் கூட விலாஸ் விலையின் ஆரம்ப விலை 5.5 கோடி. இது மேல் தட்டு மக்களுக்கு மட்டுமே சாத்தியம்.இப்படி வளர்றதுக்கு பல அரசியல் புள்ளிகள் முக்கியக்காரணம். இவங்க யாரையும் நாம கட்டு படுத்த முடியாது. ஆனா இவங்க இன்னும் வளர்றத நம்மளால தடுக்க முடியும். ஊழல் செய்கிறவன் புத்திசாலி அதை தடுப்பவன் அறிவாளி. இரண்டு பேருக்கும் உள்ள சின்ன வித்தியாசம்"TRICKS".இதோ என் தொழில் நுட்பக்கனவின்  புதிய பரிணாமம். 

நில "வரம்" :

                  நாம வாங்கிற நிலம் சரியான வடிவமைப்பில்(சதுரம், செவ்வகம்,வட்டம்) இருக்கது எல்லாருக்கும் சாத்தியம் இல்ல. வாங்குற நிலம் பூங்காவை ஒட்டி இருக்கலாம்,மலைச்சரிவில் இருக்கலாம்,ஏரி ஓரத்துல இருக்கலாம் ஏன் சுடுகாடு பக்கத்துல கூட இருக்கலாம்.இப்படி ஒரு சீரற்ற வடிவநிலமா (Irregularly-shaped landscape)இருக்கவும் வாய்ப்பு இருக்கு. இப்படி இருக்க நிலத்தோட வரைபடத்த நாம paper ல சரியாய் வரைய நமக்கு சின்ன புள்ள மாதிரி scale, pencil,ali rubber எல்லாம் வேணும். இதில்லாம நம்ம நிலத்த சரியாய் அளக்க நமக்கு வேறு சில கருவிகளும் தேவை. அதை வைத்து தான் நம்ம நிலத்தோட எல்லைகளை நாம வரையறை செய்ய முடியும். இதெல்லாம் இல்லாம நம்ம நிலத்த எப்டி வரையறை செய்றது??? இதுக்கு தாங்க நம்ம GPS service number. முன் பதிவுல சொன்னா மாதிரி நிலத்தோட எல்லைக்குள்ள உள்ளல இடத்துக்கு ஒரு நம்பர் செட் பண்ணனும் அதுல நிலத்துக்கு சொந்தமானவர் பெயரையும் சேர்த்து பதிவு பண்ணனும். ஒரு சின்ன உதாரணம் : நம்மில் பல பேர் "Google Map" Tool tip use பண்ணி இருப்போம். அதே தாங்க இந்த GPS service number. நிலத்துக்குள்ள நாம எங்க நடந்தாலும் நம்ம பெயர் மற்றும் நம்பர் வரும் நிலத்த தாண்டினதும் அடுத்த நிலத்தோட GPS service number மற்றும் அந்த நிலத்தோட உரிமையாளர் பெயர் வரும்.


பங்குச்சந்தையில் புதிய அறிமுகம் :

                                ஊழல் அதிகமா நடக்குறதே நில பதிவு பண்ற இடத்துல தான், இதுக்கு GPS service number set பண்ணா எப்டி ஊழல் குறையும்??? கண்டிப்பா குறையும் ,

அதுக்கு முதல்ல நம்ம நிலப்பதிவு பண்ற அலுவலகம் இருந்தாதான. எப்டி? ஒவ்வொரு நிலத்துக்கும் அரசாங்கமே survey number set பண்ணி இருப்பாங்க. அந்த number unique கா தான் இருக்கும். அத தான் நாம GPS number ரா செட் பண்றோம். யார் பெயர்ல நிலம் இருக்கோ அவங்க பெயர் வரும். 

                                 இப்ப நம்ம நிலத்த வாங்கவும் விக்கவும் பங்குசந்தைய நாடலாம். நாம நிலத்த விக்கனும்னா நிலத்தோட நம்பர் மற்றும் நில விலையை நீங்க பங்குசந்தைல விளம்பரம் செய்யணும். வாங்குறவங்க  உங்க நிலத்த வாங்கிக்கலாம். இப்டி செய்றனால நமக்கு registration க்கு லஞ்சம் பணம் , broker பணம், நில மோசடி இதெல்லாம் இல்லாம நிலத்த, நிலத்தோட owner கிட்ட நாமலே வாங்கலாம்.நிலம் விற்பனை செய்றதும் வாங்குறதும் சுலபம்.இவ்ளோ தாங்க. இத செயல் படுத்துறது கஷ்டம்னு யோசிக்காதீங்க. ஒரு காலத்துல TV, Land line phone வாங்க யோசிச்ச நாம இப்பலாம் LED TV, Touch Screen Mobile சாதரணமா உபயோகப்படுத்துறோம். 

டிஸ்கி : நம்ம ஊருல  இலவசமா இப்ப LAPTOP கூட கிடைக்குதுங்க :)

21 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நமீதா வருகை !!!//

எங்க எங்க?

மாணவன் said...

சோதனை ஓட்டம் (மறுமொழி).....

:)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சோதனை ஓட்டம்//

அப்படியே நேஷனல் ஹைவையில் லாரிக்கு முன்னால் ஓடவும் :)

மாணவன் said...

//நம்ம ஊருல இலவசமா இப்ப LAPTOP கூட கிடைக்குதுங்க :)//

அப்ப இங்க உங்க அண்ணன் ரமேசு சிங்கைக்கு வரும்போது LAPTOP ஒன்னு வாங்கி அனுப்பவும்... :)

தர்ஷினி said...

:)

தர்ஷினி said...

//மாணவன் said...
//நம்ம ஊருல இலவசமா இப்ப LAPTOP கூட கிடைக்குதுங்க :)//

அப்ப இங்க உங்க அண்ணன் ரமேசு சிங்கைக்கு வரும்போது LAPTOP ஒன்னு வாங்கி அனுப்பவும்... :)
//

உங்களுக்கு இல்லாமலா :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@ மாணவன்

லேப்டாப் அப்டின்னா நீ குடிக்கிற சரக்கில்லை!!

வைகை said...

@ மாணவன் , ரமேஷ்
அவங்க எவ்வளவு நல்ல விஷயம் சொல்லியிருக்காங்க? இங்க வந்து கும்மியடிசிகிட்டு இருக்கீங்க?

@ தர்ஷினி

நீங்க கவலைபடாதிங்க.. ஆமா..நமீதா வருவாங்களா? மாட்டாங்களா? எனக்கு மட்டும் சொல்லுங்க :))

வைகை said...

மாணவன் said...
//நம்ம ஊருல இலவசமா இப்ப LAPTOP கூட கிடைக்குதுங்க :)//

அப்ப இங்க உங்க அண்ணன் ரமேசு சிங்கைக்கு வரும்போது LAPTOP ஒன்னு வாங்கி அனுப்பவும்... :)//


ரெண்டா வாங்கி அனுப்பவும் :))

வைகை said...

GPS service number. நிலத்துக்குள்ள நாம எங்க நடந்தாலும் நம்ம பெயர் மற்றும் நம்பர் வரும் நிலத்த தாண்டினதும் அடுத்த நிலத்தோட GPS service number மற்றும் அந்த நிலத்தோட உரிமையாளர் பெயர் வரும்.//


நல்ல கனவு..சாத்தியம் ஆக வாய்ப்பு உண்டு ஆனால் பல வாருங்கள் காத்திருக்க வேண்டும்.. நம் துரதிஷ்டம் இதை சாத்தியப்படுத்தும் சாவியையும் திருடன் கையில்தான் கொடுத்துள்ளோம் :))

தர்ஷினி said...

ஒருத்தர்க்கு ஒரு laptop தான் குடுப்பாங்க :(

வைகை said...

IT company லையும், MNC லையும் இருக்கீங்க ஏன் உங்க office mail id ல இருந்து ஒரு சின்ன mail corruption ன எதிர்த்து supreme court க்கு அனுப்ப உங்களுக்கு தைரியம் இல்லையா ??? //


அட நீங்க வேற? பேஸ் புக்ல லைக் ப்ரெஸ் பண்ணவும் ஆர்குட்ல ஸ்டேடஸ் அப்டேட் பண்ணவே நேரம் சரியா இருக்கு? இதுல வேற போராட்டம் வேறயா? :)

தர்ஷினி said...

//நல்ல கனவு..சாத்தியம் ஆக வாய்ப்பு உண்டு ஆனால் பல வாருங்கள் காத்திருக்க வேண்டும்.. நம் துரதிஷ்டம் இதை சாத்தியப்படுத்தும் சாவியையும் திருடன் கையில்தான் கொடுத்துள்ளோம் :)//

அதுக்கு தான் நம்ம (சிரிப்பு) போலீஸ் இருகாங்க. அவர் பார்த்துப்பார்

வைகை said...

தர்ஷினி said...
ஒருத்தர்க்கு ஒரு laptop தான் குடுப்பாங்க :(//


அப்ப..லேப்டாப் வாங்கியதும் ரமேஷை கொன்று விடவும் :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வைகை said...

GPS service number. நிலத்துக்குள்ள நாம எங்க நடந்தாலும் நம்ம பெயர் மற்றும் நம்பர் வரும் நிலத்த தாண்டினதும் அடுத்த நிலத்தோட GPS service number மற்றும் அந்த நிலத்தோட உரிமையாளர் பெயர் வரும்.//


நல்ல கனவு..சாத்தியம் ஆக வாய்ப்பு உண்டு ஆனால் பல வாருங்கள் காத்திருக்க வேண்டும்.. நம் துரதிஷ்டம் இதை சாத்தியப்படுத்தும் சாவியையும் திருடன் கையில்தான் கொடுத்துள்ளோம் :))//

இனி மாற்றம் வர வாய்ப்புண்டு.

Unknown said...

74 வயசுல ஒருதான் ஊழலுக்கு எதிரா போராட்டம் நடதுரானே இது எதுக்குன்னு நீங்க யாராவது யோசிதீன்களா, இத வரதுமில்லாத ஒரு ஊழல் ஒழிப்பு போராட்டம் இப்ப சாகுற வயசுல எதுக்கு????????????இதுல என்ன உல் குத்து உள்ளது என்பதை ஆராயவேன்டாமா??????????? மேலும் விபரங்களுக்கு




http://flypno.blogspot.com/2011/08/blog-post_5939.html

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தர்ஷினி said...

//நல்ல கனவு..சாத்தியம் ஆக வாய்ப்பு உண்டு ஆனால் பல வாருங்கள் காத்திருக்க வேண்டும்.. நம் துரதிஷ்டம் இதை சாத்தியப்படுத்தும் சாவியையும் திருடன் கையில்தான் கொடுத்துள்ளோம் :)//

அதுக்கு தான் நம்ம (சிரிப்பு) போலீஸ் இருகாங்க. அவர் பார்த்துப்பார்//

ஏன் உனக்கு இந்த கொலைவெறி?

தர்ஷினி said...

// வைகை said...
தர்ஷினி said...
ஒருத்தர்க்கு ஒரு laptop தான் குடுப்பாங்க :(//


அப்ப..லேப்டாப் வாங்கியதும் ரமேஷை கொன்று விடவும் :))///


எதையுமே பிளான் பண்ணி பண்ணனும்

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

#*#$&$%$(# ஏண்டா பஸ்ல கமெண்ட் டிஸேபில் பண்ணி இருக்க.. :)

தர்ஷினி said...

// அபு சனா said...
74 வயசுல ஒருதான் ஊழலுக்கு எதிரா போராட்டம் நடதுரானே இது எதுக்குன்னு நீங்க யாராவது யோசிதீன்களா, இத வரதுமில்லாத ஒரு ஊழல் ஒழிப்பு போராட்டம் இப்ப சாகுற வயசுல எதுக்கு????????????இதுல என்ன உல் குத்து உள்ளது என்பதை ஆராயவேன்டாமா??????????? மேலும் விபரங்களுக்கு //






நம்மளும் ஒன்னும் பண்ணா மாட்டோம் ..நல்லது செய்றவங்களையும் விட மாட்டோம் அப்டி தான ??? இது ஒரு publicity காக இல்ல வேற எதுவேணா இருக்கலாம். ஆனா இந்த போராட்டம் வெற்றி பெற்றால் அது நமக்கு தான் நல்லது. ஏன் நீங்க கூட உண்ணாவிரதம் இருந்த கண்டிப்பா நாங்க எல்லாரும் உங்களுக்கு துணையாய் இருப்போம் அத விட்டு இவ்ளோ நாள் நீங்க என்ன பண்ணீங்கன்னு யோசிக்க மாட்டேன். ரோடு ல உண்ணா விரதம் இருக்கது சாதாரண விஷயம் இல்லங்க.

தர்ஷினி said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
தர்ஷினி said...

//நல்ல கனவு..சாத்தியம் ஆக வாய்ப்பு உண்டு ஆனால் பல வாருங்கள் காத்திருக்க வேண்டும்.. நம் துரதிஷ்டம் இதை சாத்தியப்படுத்தும் சாவியையும் திருடன் கையில்தான் கொடுத்துள்ளோம் :)//

அதுக்கு தான் நம்ம (சிரிப்பு) போலீஸ் இருகாங்க. அவர் பார்த்துப்பார்//

ஏன் உனக்கு இந்த கொலைவெறி?//


எல்லாம் ஒரு விளம்பரம் தான் அண்ணே :)