Monday, June 27, 2016

திருமண தோஷத்தை நீக்கும் முக்கிய சிவ ஸ்தலங்களில் -- சிவாயம்

அந்தத்தின் ஆதி :

இரவின் நிர்வாணம்
விடாமல் பெய்யும் மழை
சூறாவளி
அகண்ட வான்
அளவில்லா விண்மீன்கள்
வரையறையற்ற அலைகடல்

இந்த பிரம்மாண்ட பிரபஞ்சத்தை படைத்த ஆதி பகவான். ஆதியும் அவனே அந்தமும் அவனே. அவனின்றி ஓர் அணுவும் அசையாது. நெற்றிக்கண் திறந்தால் அண்டத்தையே நொடியில் அழிப்பவன். பெருமைமிக்க சிவனை தரிசிக்க சிவதலத்தை நோக்கி ஓர் புண்ணிய பயணம் "சிவாயம்".



சிவாயம் - சோழர்களின் படைப்பு.

நமது பண்பாட்டின் சின்னங்கள் கோயில்கள்.இறை வழிபாட்டிற்கு மட்டுமே என்ற அளவில் இருக்கும் கோயில்கள், நமது முன்னோர்களுக்கு வாழ்க்கையுடனும் சமுதாயத்துடனும் பின்னிப் பிணைந்த ஒரு ஆதார தலமாக இருந்தது. இயல் இசை நாடகங்களை கூடி இரசிக்கவோ,முக்கியச் செய்திகளை விவாதித்து முடிவெடுக்கவோ, அச்செய்திகளை அனைவரும் அறியுமாறு பதிவு செய்து பத்திரப்படுத்தவோ, வாழ்க்கைத் தத்துவங்களையும், அறிவுச் சொற்பொழிவுகளையும் கேட்டு மகிழவோ, தமது வாழ்வின் மங்கள நிகழ்ச்சிகளைக் கொண்டாடவோ மக்கள் நாடியது கோயில்களையே.


உளியின் ஓசை!

திருக்குறள் ல முதல் குறள் என்னனு கேட்டா நமக்கு தெரியும். உடனே அர்த்தத்துடன் சொல்லுவோம்.
(எவ்ளோ பஸ் ல படிச்சிருப்போம் ;) )

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு"

அதே  நூல்ல கடைசி குறள் என்னனு கேட்டா???
(யோசிங்க.. யோசிங்க ..நல்லா யோசிங்க ..)

இதாங்க நம்ம பிரச்சனை.எந்த ஒரு விஷயத்தையும் நுனிப்புல் மேயுறது தான் நம்மில் பலபேருக்கு பழக்கம். ஆனால் நம் முன்னோர்களின் செய்தி வரலாற்று பதிவாய் இன்றும் நம் கல்வெட்டில்.

பஞ்ச பூதத்தால் அழியாமல் முற்கால மூவேந்தர்களின் வரலாறு இன்றும் நம் கோயில் கல்வெட்டில் சான்று.









கங்கை முதல் கடாரம் வரை அறியணை ஏறிய முகவரியும் உண்டு
கடல் கடந்து மும்முடி தரித்த முதல்வன் என்ற வரலாரும் உண்டு
கல்லணை கட்டியும் மைந்தன் மேல் தேரோட்டி நீதியை வணங்கியும்
புவியில் பெருங்கோயில் அமைத்து, ஔவையின் வரப்புயர பா மாலையும் ரசித்து
இரு ஆயிரம் பட்டங்களையும் சுமந்து பல்லாயிரம் பிறைகளைக் கண்ட வம்சமிது
காலச்சுவடுகள் எமக்களித்த அழியாப் புகழ் கண்டு வீரமுடன் செங்குருதி சிந்திய இனமிது.

கருவறையில் இருக்கையிலே
இருட்டறை தான் என்றாலும்
உணர்ந்தோம் ஒரு பாதுகாப்பை.
வெளிச்சமும் பிடிக்கவில்லை
வெளியுலகம் வருவதற்கோ
துளியளவும் விருப்பமில்லை.
உள்ளேயே இருப்பதற்கா
கருவாய் நீ உருவானாய்
என்றே பரிகசித்தே படைத்தவன்
பாரினில் பிறக்க வைத்தான்.




மொத்தத்தில், ‘தமிழ்நாட்டின் பொற்காலம்' என்று அறிஞர்கள் போற்றும்




சோழர் கோயில்களை ஆராய்வதன் மூலம் கோயிற் கட்டிடக்கலை வளர்ச்சியைப்பற்றி நாம் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறாக கலைகளைப் பற்றிய பல செய்திகளையும் கோயில்கள் நமக்கு வழங்குகின்றன. இச்செய்திகளை வழங்கும் கல்வெட்டுகளையும், சிற்பங்களையும், ஓவியங்களையும் பாதுகாப்போம், அவற்றைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வோம், அவற்றை ஆராய்ந்து புலமை பெறுவோம்.



மதத்துடன் தன்னை அடையாளம் காண்பதில்
மனிதநேயத்தை தொலைக்கிறோம்
                     




குரு பார்வை இல்லை.
சுக்கிரன் நீசம்
செவ்வாய் தோஷம்
நாக தோஷம்
மூலம்

சரியான வரன் அமையவில்லை

பொருளாதாரச் சிக்கல். வரதட்சணைக்கு வழியில்லை.

இப்படியாக திருமணம் தடைபட எவ்வளவோ காரணங்கள். எதுவாகத்தான் இருக்கட்டுமே! ஆண்டவன் அருளிருந்தால் நாளென்ன செய்யும், கோளென்ன செய்யும்?

பக்தர்களின் குறை தீர்த்து அருள்பாலிப்பதற்காகவே கோயில்களில் குடிகொண்டிருக்கும் இறைவன் சில குறிப்பிட்ட திருத்தலங்களில் திருமண வரம் தரும் விசேஷத் தன்மை கொண்டு விளங்குகிறான். என்ன அதன் காரணம்? அந்தத் திருத்தலத்தின் மகிமை என்ன? அது எங்கிருக்கிறது? எப்படிச் செல்லவேண்டும்? அத்தலத்தில், திருமணம் கைகூடி வர என்ன செய்யவேண்டும்? நிவர்த்தி என்ன? பரிகாரம் என்ன?