நூற்றி இருபது ரூபா !!!
சிறு தீக்குச்சி
சமைக்க கறிகாய்
படைக்க முக்கனி
குட்டிக்குடில்
மறைக்கும் கதவு
காக்கும் வேலி
எழுத்தறிவிக்கும் காகிதம்
கண்டிக்கும் ஆசானின் ஆயுதம்
மணக்கும் பூமாலை
கலப்பதற்கு கட்டில்
மஞ்சத்தின் தலையணை
முதல்
மரணத்தின் சவப்பெட்டி
வரை
அழியும்
நான்
இயற்கையின் சுவாசம்
உங்களின் உயிர் மூச்சு....
தனக்காக வாழும்
உங்களுக்கு...
உங்களுக்காக உயிர் விடும்
என்னை வளர்க்க
நேரமில்லை...
என் ஆரம்ப விலை
பத்து ரூபாய் மட்டுமே
மாதம் ஒன்று
வருடத்திற்கு பன்னிரண்டு
மொத்தச செலவு
நூற்றி இருபது ரூபா
உங்களின் ஒரு மாத கேபிள் வாடகையை விட குறைவே ...
பிரபஞ்சத்தின் ஓர் உயிர்க்கோளை
உங்களை விட்டால் வேறு யார் தான் பார்பதாம்!!!
டிஸ்கி : உங்களுக்கு வீட்ல தோட்டம் இல்லையா..இல்ல பராமரிக்க நேரம் இல்லையா ..மரம் வளர்க்க ஆசை இருந்த மட்டும் போதும்... கவலைய விடுங்க.. எது எதுக்கோ கோவிலுக்கு போறீங்க, இதுக்காக கூட போலாம்ங்க. சின்ன மரக்கண்ணு வாங்கீட்டு போங்க. வேண்டுதல்ன்னு சொல்லி குடுங்க உங்க அம்மனுக்கு...பண்ண பாவத்துக்கு எவ்ளோ பலி குடுக்குறோம். பலியான பாவத்துக்கு சின்ன உயிரை காணிக்கையா குடுங்க. அம்மன் சந்தோசமா உங்க காணிக்கையை ஏத்துப்பாங்க :)