தமிழக சாம்ராஜ்யத்தை பற்பல மேதைகள் ஆண்டனர். அதில் குறிப்பிட்ட சில மேதைகள் தொடர்ந்து பல ஆண்டுகள் ஆண்டு வரலாற்று சாணக்கியராய் ஆகினர்.மதி பிழிந்து யோசித்து மண்ணைக்காத்த மன்னன்களுக்கு பதிலாய் மதி கெட்டு மலிந்த ஊழல் மத்தியில் நான் கற்றது அவர்கள் சுரண்டுவதற்கு அல்ல என்று உங்களுக்கு உணர்த்தவே.
வீரமா எழுதினா மட்டும் ஊழல் ஒழியுமா?? இல்லங்க ஆனா நம்ம விழிப்புணர்வினால் ஊழல் குறையும். எப்பிடி??
குள்ள நரிக்கூட்டம் - இதுலையுமா?
நம்ம மாநிலத்தில் இனி மூன்று மாதங்களில் புதிய ரேசன் கார்டுகள் பட்டுவாடா..போலி மின்னணு குடும்ப அட்டைகளை தடுக்கவாம்.தேசிய மக்கள் தொகை பதிவு அமைப்பின் கீழ் பத்து விரல் ரேகைகள் மற்றும் கண்ணின் கருவிழி ஆகியவற்றை பதிவு செய்து, பிரத்தியேக அடையாள அட்டை வழங்குவதற்கான கணக்கெடுப்பு தற்போது நடத்தப்பட்டு வருகிறது. இந்த உடற்கூறு முறையிலான கணக்கெடுப்பு முடிந்தவுடன், மின்னணு குடும்ப அட்டை வழங்கப்படுமாம்.
இது மூக்க தொட தலைய சுத்தின கதையா இல்ல??? ஒரு காலத்துல அமெரிக்க விண்வெளி மேதைகள் வின்கலத்துல குறிப்பு எடுக்க பால்பாயிண்ட் பேனாவ கொண்டு போய் புவிஈர்ப்பு விசைனால அந்த பால்பாயிண்ட் பேனாவ use பண்ணவே முடியலையாம். அப்புறம் அதுக்குன்னு ஒரு தனி ஆராய்ச்சி பண்ணாங்களாம். அத பார்த்த இன்னோர் நாட்டு விண்வெளி மேதை ஒரு சின்ன Pencil இல எடுத்துட்டு போனாராம். இது நகைச்சுவைக்கு இல்லங்க. ஒரு சின்ன விசயத்துக்கு ரொம்ப யோசிக்க தேவ இல்லை.
அப்ப எளிய முறையில் எப்பிடி ஊழல தடுக்கலாம்? எனது அடுத்த கனவு(சும்மா தூங்கிட்டே இருந்தா இப்டி தான்!!!) எல்லார் வீட்லயும் மின்சாரம் இருக்கோ இல்லையோ ஆனா கண்டிப்பா மாதம் தவறாம பில் வரும். அதுல உள்ள EB No. கண்டிப்பா unique கா தான் இருக்கும். அத மட்டும் மின்னணு குடும்ப அட்டையில் சேர்த்தா போதும். அசல் யாரு போலி யாருன்னு சுலபமா தெரிஞ்சிடும்.