ஆதியும் அவனே அந்தமும் அவனே. அவனின்றி ஓர் அணுவும் அசையாது. நெற்றிக்கண் திறந்தால் அண்டத்தையே நொடியில் அழிப்பவன். பெருமைமிக்க சிவனை தரிசிக்க சிவதலத்தை நோக்கி இரு நண்பர்களின் புண்ணிய பயணம்.
இரவின் நிர்வாணம்
அந்த இரு நண்பர்கள் பல இடையூறுகளை கடந்து வருகிறார்கள் இந்த சிறப்புமிக்க சிவதலதிற்கு. ஒவ்வொரு முறை அவர்கள் கிளம்பும் போதும் ஓர் தடை. அது பணமாக, நோயாக அல்லது இயற்கை சீற்றமாக.இது அவர்களின் கனவு ஸ்தலம் என்றே மாறிவிட்டது எனலாம்.
இப்படி கனவுகளுடன் சிவதலத்தின் சன்னிதியை அடைந்தார்கள். அன்றோ பிரதோஷம். பக்தியில் மக்கள் வெள்ளம். நுழைவு சீட்டு எடுக்கும் வரிசையில் பிரபல பிரமுகரின் வருகையில் பரபரப்பு. " சிறப்பு மனிதருக்கு சிறப்பு கவனிப்பு". அவருக்கு முன் வந்த இவர்களுக்கோ நுழைவாயிலை தாண்டிய வரிசை.
அதிகாலை முதல் விரதம். சொட்டு நீர் அருந்தாமல் பக்தியுடன் வரிசையில். மெதுவாக நகர்ந்தது வரிசையும் நேரமும். உச்சிகால பூஜை நெருங்கும் தருவாயில் இவர்கள் இருவரும் கருவறை வாசலை அடைந்தனர். அணு அணுவாய் சிவலிங்கம் தரிசித்தனர்.
ஓர் நிமிடம் தான்..ஒரே ஓர் நிமிடம் தான். அதிர்ச்சி. இருவர் பார்வையும் பரிமாறிக்கொண்டது அர்த்தத்துடன்.. பின் ஏளனமாய் சிரித்தனர். இந்த லிங்கம் தரிசிக்கவா தவம் இருந்து வந்தோம்?? என அவர்களே எள்ளி நகையாடினர்.
(20௦ ஆண்டுகளுக்கு முன் இந்த இரு நண்பர்கள் வாழ்ந்த ஓர் கிராமம், அதில் சிறிய ஆறு.. பால்ய வயதில் ஓர் விளையாட்டு. ஆற்றை வேகமாய் நீந்தி கடந்து யார் முதலில் போய் அந்த பாறையை தொடணும். ஜெயித்தவன் பெயரின் முதல் எழுத்து பாறையில் செதுக்கப்படும். இதில் செதுக்கிய எழுத்தின் உரிமைக்காரன் பாறையில் தான் அந்த சிவ லிங்கம் செதுக்கி இருந்தார்கள்..இது தான் அவர்கள் நகையின் காரணம் )
இது வெறும் கற்பனை கதையே. எந்த ஒரு கற்களும் கடவுள் ஆக வாய்ப்பில்லை. நம் முன்னோர்கள் கற்களை செதுக்கிய காரணங்களே வேறு.
Shiva Lingam - The Symbol Of Sex
(மனித வாழ்வின் ஆரம்பம்.)
இரவின் நிர்வாணம்
விடாமல் பெய்யும் மழை
சூறாவளி
அகண்ட வான்
அளவில்லா விண்மீன்கள்
வரையறையற்ற அலைகடல்
இந்த பிரம்மாண்ட பிரபஞ்சத்தை பார்த்து பயந்து உருவாகின நம் ஆதி பகவானும்,வருண பகவானும்.
"ஆதி மனிதனின் பயம் கடவுளாய் ஆனது".
மதத்துடன் தன்னை அடையாளம் காண்பதில்
மனிதநேயத்தை தொலைக்கிறோம்
கடவுள் இருகிறாரா??இல்லையா ??
இதற்க்கு விடை ....... நாமே தேடலாம் ...நம்மிடமே.
அன்பே சிவம்..உன் வாழ்க்கை உன் கையில்..